குடும்ப பிரச்சனையில் சலவை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.

குடும்ப பிரச்சனையில் சலவை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.

குடும்ப பிரச்சனையில் சலவை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.

குடும்ப பிரச்சனையில் சலவை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மாலந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சலவை தொழிலாளி முனுசாமி( 60). இவர் செங்குன்றம் அருகே ஜனப்பன் சத்திரம் கூட்டுச்சாலை பகுதியில் உடைகளை இஸ்திரி செய்யும் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் இவரது மனைவிக்கும் முனுசாமிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் கடந்த 10.ம் தேதி கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறு முற்றவே முனுசாமி வீட்டை விட்டு வெளியே சென்று உள்ளார். பின்னர் இரவு வரை வீடு திரும்பாததால் மறுநாள் காலை அவரது மகன் மணிகண்டன் தன் தந்தை காணவில்லை என்று பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன முனுசாமியை தேடி வந்த நிலையில்.மாலந்தூர் காப்புக்காடு அருகே மரத்தில் அழகிய நிலையில் தூக்கில் தொங்கியவாறு ஒருவரது பிணம் கிடப்பதாக அப்பகுதியில் ஆடு மேய்க்கும் சிலர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியபாளையம் போலீசார் விசாரணை நடத்தியதில் இறந்து போன நபர் காணாமல் போன சலவைத் தொழிலாளி முனுசாமி என்பது தெரிய வந்தது. பின்னர் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்பத் தகராறு காரணமாக சலவைத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story