கொலைக் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை.

கொலைக் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை.

நாமக்ககல் மாவட்டம் பரமத்தி வேலூர் கொலைக் குற்றவாளிக்கு நாமக்கல் மாவட்டக் கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கி தீா்ப்பு வழங்கியுள்ளது

கொலைக் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை.

நாமக்கல் மாவட்டம், வேலூர் உட்கோட்டம், வேலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமாட்சி நகரில் கடந்த 2014-ம் ஆண்டு 70 வயதுடைய முதியவரைக் கொலை செய்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இவ்விசாரணையில் பெரமாண்டார் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கு விசாரணையானது நாமக்கல் மாவட்டக் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நாமக்கல் மாவட்டக் கூடுதல் அமர்வு நீதிபதி சுந்தரைய்யா, இவ்வழக்கின் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.500/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கில், சிறப்பாகப் புலன் விசாரணை செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்து சிறப்பாக செயல்பட்ட வேலூர் காயல் ஆய்வாளர் இந்திராணி மற்றும் காவலர்களை நாமக்கல் பாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வெகுவாகப் பாராட்டினார்.

Tags

Read MoreRead Less
Next Story