நீதிமன்றத்தில் சுபாஷ் பண்ணையார் ஆஜர் - போலீஸ் குவிப்பு

நீதிமன்றத்தில் சுபாஷ் பண்ணையார் ஆஜர் - போலீஸ் குவிப்பு

கொலை வழக்கு தொடர்பாக அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் சுபாஷ் பண்ணையார் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜரானார். 

கொலை வழக்கு தொடர்பாக அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் சுபாஷ் பண்ணையார் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜரானார். 
தூத்துக்குடி மாவட்டம், பழையகாயல் அருகேயுள்ள புல்லாவெளியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் என்ற சிங்காரம் (50). இவர் கடந்த 2017ஆம் ஆண்டு ஒரு வழக்கு விசாரணைக்காக ஆஜர் செய்வதற்காக போலீசார் வாகனத்தில் அழைத்து சென்றபோது வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் சுபாஷ் பண்ணையார் இன்று தூத்துக்குடி மகிளா நீதிமன்ற நீதிபதி மாதவ ராமானுஜம் முன்னிலையில் ஆஜரானார். வழக்கு விசாரணையை வரும் 9ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். இதையொட்டி தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags

Read MoreRead Less
Next Story