கோவிலுக்கு செல்வதாக கூறிச் சென்ற கணவர் மாயம்: மனைவி புகார்

கோவிலுக்கு செல்வதாக கூறிச் சென்ற கணவர் மாயம்: மனைவி புகார்

காவல் நிலையம்

தக்கலை அருகே கோவிலுக்கு சென்ற கணவர் மாயமானது குறித்து மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள புங்கறையை சேர்ந்தவர் மணிகண்டன் .இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உண்டு. அப்பகுதியில் வாகன சர்வீஸ் சென்டர் வைத்துள்ளார். கடந்த 15 ம் தேதி அருகில் உள்ள கோவிலுக்கு செல்வதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடிய வில்லை. ஆனால் வீட்டில் என்னை தேட வேண்டாம் என கடிதம் இருந்தது.

இது தொடர்பாக மனைவி அஞ்சு தக்கலை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Tags

Next Story