தூத்துக்குடியில் கொடூரம் - மதுபோதையில் தாயை குத்தி கொலை செய்த மகன்

தூத்துக்குடியில் கொடூரம் - மதுபோதையில் தாயை குத்தி கொலை செய்த மகன்

குடோடில்டா

தூத்துக்குடியில் மது போதையில் தாயை கத்தியால் குத்தி மகன் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மட்டகடை அருகே உள்ள வடக்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குடோடிடல்டா. இவரது கணவர் ஞானதீபம். கணவன் மனைவி பிரச்சனை காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் தனியாக வசித்து வருகின்றார் இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்களது மூன்றாவது மகனான ஜெயின் புரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார். ஜெயின் மாற்று சமூகத்தில் திருமணம் செய்துள்ள நிலையில் அடிக்கடி தனது தாயுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு தாய் குடோடில்டா தனியாக வீட்டில் இருந்த நிலையில் மது போதையில் சென்ற ஜெயின் தனது தாயுடன் தகராறு செய்துள்ளார். இதில் தாயை கத்தியால் குத்தி விட்டு ஜெயின் தப்பி ஓடி உள்ளார். தகவல் அறிந்து வந்த சம்பவ இடத்திற்கு வடபாகம் காவல்துறையின் விரைந்து வந்து கொலையான தாய் குடோலிட்டா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story