இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் மூவர் காயம் - போலீசார் விசாரணை

இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் மூவர் காயம் - போலீசார் விசாரணை
விருதுநகர் அருகே அழகாபுரி விளக்கில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் மூவர் காயம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை
விருதுநகர் அருகே அழகாபுரி விளக்கில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் மூவர் காயம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை
விருதுநகர் அருகே அழகாபுரி விளக்கில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் மூவர் காயம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை விருதுநகர் அருகே உள்ள சந்திரகிரிபுரம் பகுதியைச் சார்ந்தவர் பாண்டியராஜ் வயது 24 இவர் விருதுநகரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் சிவகாசி- விருதுநகர் சாலையில் அழகாபுரி விலக்கில் வந்து கொண்டிருந்த பொழுது விருதுநகர் தாலுகா வள்ளியூர் அருகே உள்ள குமாரலிங்க புரத்தை சார்ந்த பெரிய கருப்பன் என்பவர் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் ராஜா என்பவர் உடன் வந்த நிலையில் , பாண்டியராஜ் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார். இந்த விபத்தில் ராஜாவும் காயமடைந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் காயமடைந்த மூவரும் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கூரி காயமடைந்த பாண்டியராஜன் தன் தாய் பூச்சம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story