அனுமதி இன்றி கற்களை ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல்.

தென்னிலை அருகே,அனுமதி இன்றி கற்களை ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல்.
கரூர் மாவட்டம் க.பரமத்தி, தென்னிலை சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளது. இந்த கல்குவாரிகளில் இருந்து முறையான அனுமதி இன்றி லாரிகளில் கற்கள் ஏற்றி செல்லப்படுவதாக, கரூர் புவியியல் மற்றும் சுங்கத்துறை தனி வருவாய் ஆய்வாளருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் டிசம்பர் 28ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில், கரூர் மாவட்டம், தென்னிலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, அத்திப்பாளையம் சுடுகாடு பிரிவு அருகே, வாகன தணிக்கை ஈடுபட்டார் வருவாய் ஆய்வாளர் சந்துரு. அப்போது அப்பகுதியில் வந்த லாரியை தடுத்து ஆய்வு செய்தபோது, அந்த லாரியில் கற்களை ஏற்றி வந்ததற்கான அனுமதி சீட்டு இல்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் லாரியையும் லாரியில் ஏற்றி வந்த ஆறு யூனிட் கருங்கற்களை பறிமுதல் செய்தனர். லாரி உரிமையாளர் கரூர், தாந்தோணி மலை, பாரதிதாசன் நகரை சேர்ந்த சுப்பிரமணி, லாரி ஓட்டுநர், கரூர் மாவட்டம், குளித்தலை தாலுக்கா,கீரனூர் பகுதியைச் சேர்ந்த மருதை வயது 56, ஆகிய இருவர் மீதும் வருவாய் அலுவலர் சந்துரு அளித்த புகாரின் பேரில், தென்னிலை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story