வாலிபரை வீடு புகுந்து தாக்கிய இருவர் கைது

வாலிபரை வீடு புகுந்து தாக்கிய இருவர் கைது

கைது செய்யப்பட்டவர்கள் 

நித்திரவிளை அருகே வீடு புகுந்து வாலிபரை இரும்பு கம்பியால் தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

நித்திரவிளை அருகே ஆற்றுப்புறம் வீட்டில் வசிப்பவர் மோகன் தாஸ்.இவரது மகன் மைக்கேல் ராஜ்.இவரை வாளவிளை வீட்டை சேர்ந்த ராஜன் என்பவரது மகன் ரெதீஸ் என்ற மணிகண்டன் அடிக்கடி தகாத வார்த்தைகள் பேசியும் பணம் கேட்டும் மிரட்டி வந்துள்ளார்.

இந்த நிலையில் மணிகண்டன் மற்றும் பாலமடம் பகுதியை சேர்ந்த வென்சிலாஸ் மகன் அஜித் ஆகிய இருவரும் சேர்ந்து மணிகண்டனுக்கு சொந்தமான சொகுசு காரில் மைக்கேல் ராஜ் வீட்டிற்கு சென்று அத்துமீறி உள்ளே நுழைந்து இரும்பு கம்பியால் இருவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த மைக்கேல் ராஜ் குழித்துறை அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார்.இது தொடர்பாக நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டன் அஜித் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்

Tags

Next Story