அம்மாபேட்டை அருகே சாலை விபத்தில் வடமாநில தொழிலாளர்கள் இருவர் பலி
மேற்கு வங்காள மாநிலம் ஜூப்மயா பகுதியை சேர்ந்த ராஜேந்திர பக்டி25, தினபண்டு மஜ்ஹி, 25, மருதவான் பகுதியை சேர்ந்த மித்தோன் மஜ்ஹி, 24, இவர்கள் மூவரும் தஞ்சாவூரில் உள்ள கோழிக்கடை ஒன்றில் பணியாற்றி வந்தனர்
. இந்நிலையில், தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டையில் உள்ள கோழிப்பண்ணையில் இருந்து நேற்று லோடு வேனில், கோழிகளை ஏற்றிக்கொண்டு, அந்த வண்டியின் பின்னால் மூவரும் உட்கார வைத்துக் கொண்டு, கும்பகோணத்திற்கு சென்றனர்.
அப்போது, சாலியமங்கலம் பகுதியில் சென்றுக்கொண்டிருந்த போது, லோடு வேன் எதிர்பாராத விதமாக சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில், வண்டியின் பின்னால் உட்கார்ந்து இருந்த மூன்று பேரில், ராஜேந்திர பக்ட, தினபண்டு மஜ்ஹி, கோழிப்பெட்டியில் இடுக்கில் சிக்கி மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
மித்தோன் மஜ்ஹி காயமடைந்தார். சம்பவ இடத்திற்கு வந்த அம்மாப்பேட்டை போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு, தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இறந்த இருவரின் உடல்களை மீட்டு, பாபநாசம் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், வடுவூரை சேர்ந்த டிரைவர் கமலக்கண்ணனிடம் விசாரித்து வருகின்றனர்.