இரண்டு சக்கர வாகனம் திருட்டு

இரண்டு சக்கர வாகனம் திருட்டு

நகராட்சி பணியாளரின் இரண்டு சக்கர வாகனம் திருட்டு

நகராட்சி பணியாளரின் இரண்டு சக்கர வாகனம் திருட்டு
. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அய்யன்தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன், 51. குடிநீர் வடிகால் வாரிய பணியாளராக பவானியில் பணியாற்றி வருகிறார். இவர் ஜன. 27ல் இரவு 08:00 மணியளவில் வேலை முடிந்து வந்து, வீட்டின் முன்பு, தனது ஹோண்டா சி.டி. டூவீலரை நிறுத்தி வைத்தார். மறுநாள் காலை 05:45 மணியளவில் எழுந்து வந்து பார்த்த போது, டூவீலரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் குமாரபாளையம் போலீசில் ரவிச்சந்திரன் புகார் செய்தார். இதன்படி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story