நெய்யாறு கால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

நெய்யாறு கால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

காவல் நிலையம்

களியக்காவிளை அருகே நெய்யாறு கால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.

களியக்காவிளை அருகே நெய்யாறு இடதுகரை கால்வாயில் தவறி விழுந்து, தேங்கி நின்ற மழை நீரில் மூழ்கி உயிரிழந்த கட்டு மான தொழிலாளியின் சட லத்தை போலீசார் நேற்றுமாலை மீட்டனர். களியக்காவிளை அருகே வல்லறக்கல்விளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ (75).

கட்டுமான தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. இவர் நேற்று முன்தினம் இரவு களியக்காவிளைக்கு சென் றுவி ட்டு கீழே களியக்கல் பகுதியில் நெய்யாறு இடதுகரை கால்வாய் கரையோரமாக வீட்டுக்கு நடந்து சென்று

கொண்டிருந்தார்.

அப்போது அவர் தவறி கால்வாயில் விழுந்துள்ளார். இந்த நிலையில் கால் வாய் நீரில் மூழ்கி உயிரி ழந்த நிலையில் கிடந்த அவரது சடலத்தை அப்ப குதியினர் நேற்று மாலையில் கண்டு களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் அப்பகுதிக்கு வந்து, சடலத்தை கைப் பற்றி பிரேத பரிசோத னைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

களி யக்காவிளை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story