வெண்ணெய் புட்டு ரெசிபி !!
Butter Pudding Recipe
தேவையான பொருட்கள் :
அரிசி - அரை கப்
கடலை பருப்பு- கால் கப்
துருவிய தேங்காய் - அரை கப்
வெல்லம் - 1 கப்
ஏலக்காய் - 2
உப்பு - சுவைக்கேற்ப
நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை :
முதலில் அரிசி மற்றும் கடலை பருப்பை தண்ணீரில் அலசிவிட்டு, 2 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்
இதற்கிடையில், அரிசியை மட்டும் மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது அடுப்பில் பாத்திரத்தை வைக்கவும். அதில் கடலை பருப்பை சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி வேகவைக்க வேண்டும். சுமார் 10 நிமிடங்கள் வேகவைத்தால் போதும்.
கடலை பருப்பு வெந்ததும் அரைத்து வைத்துள்ள அரிசியை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். கலவை கெட்டியாகும் வரை தொடர்ச்சியாக கிளற வேண்டும்
கெட்டி பதத்திற்கு வந்ததும் வெல்லம் சேர்த்து மீண்டும் நன்றாக கிளறிக்கொண்டே இருங்கள்.
பிறகு, நசுக்கிய ஏலக்காய், தேங்காய் துருவல் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கிளற வேண்டும்
இறுதியாக, ஒரு டீஸ்பூன் நெய் விட்டு கிளறினால் ருசியான வெண்ணெய் புட்டு ரெடி.