பக்கவான பாகற்காய் சுக்கா...!

பக்கவான பாகற்காய் சுக்கா...!

பாகற்காய் சுக்கா...!

பாகற்காய் என்றதும் ...ஐயோ பாகற்காயா ..என முகம் சுளிக்கும் நம்மில் பலர் உண்டு. அப்படிபட்டவங்களுக்குதாங்க இந்த ரெசிபி... கொஞ்சம் கூட கசப்பே தெரியாமல் பாகற்காயை எப்படி சமைப்பது என்று பார்க்கலாம்.

பாகற்காய் சுக்கா ரெசிபி. இந்த சுக்கா செய்யும் போது அதில் எப்படி கசப்பு எடுப்பது என்றும் தெரிந்து கொள்ளுங்கள்

தேவையான பொருட்கள்:

பாகற்காய் -கால் கிலோ ,

சின்ன வெங்காயம் -100 கிராம் ,

பூண்டு-10 பல்,

கறிவேப்பிலை - 4 கொத்து ,

எண்ணெய்-100 ml ,

காஷ்மீர்மிளகாய் தூள் -1 டேபிள் ஸ்பூன் ,

குழம்பு மிளகாய் தூள்-1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்,

சாம்பார் பொடி-1/2 டேபிள் ஸ்பூன் ,

சிறிதளவு வெல்லம்.

தேவையான அளவு உப்பு

செய்முறை:

1. முதலில் பாகற்காயை பொடியாக நறுக்கிய அதை உப்பு கலந்த தண்ணீரில் 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இப்படி ஊற வைத்து பிழிந்து எடுக்கும் போது அதில் இருக்கும் கசப்பு, சமைத்த பின்பு துளி கூட தெரியாது.

2. இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும் .

3., பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள பாகற்காய் உப்பு சேர்த்து 20 நிமிடம் வேக வைக்க வேண்டும்

4. பாகற்காய் வெந்து தோல் சுருங்கிய பின்பு அதில் காஷ்மீர் மிளகாய் தூள், குழம்பு தூள், மஞ்சள் தூள், சாம்பார் பொடி சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் எண்ணெய்யில் வறுக்க எடுக்க வேண்டும்.

5. பின்பு வெல்லம் பொடியை சேர்க்க வேண்டும். இப்படியே தொடர்ந்து 20 நிமிடம் மூடி போட்டு வறுத்தால் எண்ணெய் தனியாக பிரிந்து வந்துவிடும்.

6. அவ்வளவுதான் இப்போது சுவையான கசப்பு தெரியாத பாகற்காய் சுக்கா தயார்.

Tags

Next Story