செட்டிநாடு மசாலா பணியாரம் ரெசிபி !!
சமையல்
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - 2 கப்
உளுத்தம் பருப்பு - ஒன்றரை கப்
தேங்காய் துருவல் - கால் கப்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 4
ப.மிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிதளவு
கடலை எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
முதலில் ஒரு பவுலில் 2 கப் பச்சரிசி மற்றும் ஒன்றரை கப் உளுந்தை ஒன்றாக சேர்த்து குறைந்தது 1 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு, கலவையை மிக்ஸி ஜாருக்கு மாற்றி மாவு பதத்திற்கு அரைத்து உப்பு போட்டு மிக்ஸ் செய்து தனியாக வைக்கவும். பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முதலில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும் பிறகு, நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து வதக்க வேண்டும். வதக்கியதை மாவில் சேர்த்து கலக்க வேண்டும். கெட்டியாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்க்க செய்யலாம். இப்போது பணியார சட்டியை அடுப்பில் வைக்க வேண்டும். ஒவ்வொரு குழியிலும் எண்ணெய் விட்டு மசாலா பொருட்கள் சேர்த்த மாவை ஊற்ற வேண்டும். மாவு ஒருபக்கம் வெந்ததும், திருப்பிப்போட்டு வேகவைத்து எடுத்தால், சுவையான செட்டிநாடு ஸ்பெஷல் மசாலா பணியாரம் தயார்.