ருசியான மாதுளை பொரியல் !

ருசியான மாதுளை பொரியல் !

Delicious pomegranate fries

செரிமான ஆரோக்கியத்தை பராமரிக்க மாதுளம் பழத்தில் நல்ல நார்ச்சத்து உள்ளது, இது செரிமானத்திற்கு நன்மை பயக்கும். கருவுறுதலை மேம்படுத்தும் மாதுளை நார்ச்சத்து, வைட்டமின் சி, ஏ, ஃபோலிக் அமிலம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாகும்.


தேவையான பொருட்கள் :

மாதுளை - 1 கப்

ப.மிளகாய் - 2

உளுந்து - 1 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - சுவைக்கேற்ப

தேங்காய் துருவல் - 1 கப்

செய்முறை :

முதலில் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகை சேர்த்து தாளிக்க வேண்டும். அடுத்து, 1 டீஸ்பூன் உளுந்து மற்றும் நறுக்கிய பச்சை மிளகாயை சேர்க்க வேண்டும். இதற்கிடையில், வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி கடாயில் சேர்க்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் 1 கப் மாதுளை பழத்தை கலவையுடன் சேர்த்து கிளறிவிட வேண்டும். இப்போது கலவையில் தேவையான அளவு உப்பு மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து கிளறிவிட்டு அடுப்பில் இருந்து இறக்க வேண்டும். அவ்வளவுதான், ருசியான மாதுளை பொரியல் ரெடி.

Tags

Next Story