டிராகன் சிக்கன் ரெசிபி !!
டிராகன் சிக்கன்
டிராகன் சிக்கன் டிரை-யாக,காரம் கூடுதலாக இருக்கும். சுவை மிக அருமையாக இருக்கும். கடைகளில் வாங்குவதை விட சிறப்பான சுவை. அனைவராலும் விரும்பப்படும் ரெசிபியாக இருக்கும்.கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க..
தேவையான பொருட்கள் :
எலும்பில்லா சிக்கன் - 1/2கிலோ
பெரிய வெங்காயம் - 1
சிறிய குடை மிளகாய் - 1
முட்டை - 2
சோள மாவு - 2டேபிள் ஸ்பூன்
மைதா மாவு - 3டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 2+1டேபிள் ஸ்பூன்
வினிகர் - 1டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 2+1ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2ஸ்பூன்
தக்காளி சாஸ் - 1/4கப்
சிவப்பு மிளகாய் சாய்ஸ் - 1/4கப்
வறுத்த எள் - 1/2ஸ்பூன்
வரமிளகாய் - 4
நறுக்கிய பூண்டு - 2ஸ்பூன்
முந்திரி - 15
உப்பு - தேவையானஅளவு
எண்ணெய் (பொரிக்க) - தேவையானஅளவு
செய்முறை :
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். 10காஷ்மீரி மிளகாயை சூடு நீரில் ஊற விட்டு அரைத்து சில்லி சாஸ் தயார் செய்யலாம். இது பாக்கெட்-களில் வாங்கும் சாஸ் விட காரம் நன்றாக இருக்கும்.
டிராகன் சிக்கன் செய்வதற்கு நீள்வாக்கில் வெட்டிய எலும்பில்லா சிக்கன் துண்டுகளை தான் பயன்படுத்துவார்கள்.
நன்கு கழுவிய சிக்கன் துண்டுகளில்,இஞ்சி பூண்டு விழுது, சோள மாவு, மைதா மாவு,மிளகு தூள் மற்றும் உப்பு கலந்து பின் முட்டை,சோயா சாஸ்,வினிகர் சேர்த்து கலந்து 30நிமிடங்கள் ஊற விடவும்.
பின் அடுப்பில் வாணலி வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், மீடியம் தீயில் வைத்து சிக்கன் துண்டுகளை பொரித்து எடுக்கவும்.
இனி,கடாயில் பொரித்த எண்ணெயில் இருந்து 3ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி பூண்டு வரமிளகாய்,முந்திரி (சுவை கூட்டும்) சேர்த்து லேசாக வதக்கி, நறுக்கிய வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.லேசாக வதங்கினால் போதும்.
பின் நீளமாக நறுக்கிய குடை மிளகாய் சேர்த்து கிளறவும். குடை மிளகாய் லேசாக வதங்கியதும், தக்காளி மற்றும் சிவப்பு மிளகாய் சாஸ் சேர்க்கவும்.
பின் மிளகு தூள் சர்க்கரை சேர்த்து கலந்து விடவும். இதனுடன் 100ml அளவில் தண்ணீர் தெளித்து சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
சில நிமிடங்கள் அதிக தீயில் வைத்து கிளறி விட்டு,அடுப்பை அணைக்கவும். பின் மல்லிதழை சேர்த்து, கடைசியாக எள் தூவி பரிமாறவும். இனிப்பும் காரமுமான டிராகன் சிக்கன் ரெடி.