வெயிலுக்கு இதமா தர்பூசணி ஐஸ்கிரீம்...எப்படி செய்றதுன்னு பார்க்கலாமா !!

வெயிலுக்கு இதமா தர்பூசணி ஐஸ்கிரீம்...எப்படி செய்றதுன்னு பார்க்கலாமா !!

தர்பூசணி குல்பி

இந்த கோடைகாலத்தில் நம்மை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள பல முறைகளை மேற்கொள்கிறோம். இந்த கோடைகாலத்தில் ஈஷியாக கிடைக்க கூடிய தர்பூசணியை வைத்து தர்பூசணி ஐஸ்கிரீம் செய்யலாமா ? அட செய்யலாங்கா வாங்க எப்படி செய்றதுன்னு பாக்கலாம்.

இந்த வெயில் சீசனில் குல்பியையும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். கொளுத்தும் வெயிலுக்கு குளிர்ச்சி தருவது மட்டுமே அனைத்து வயதினரும் குறிப்பில் விரும்பி சாப்பிடுவார். அத்தகைய சூழ்நிலையில் தர்பூசணியிலிருந்து தயாரிக்கப்படும் குல்பி இன்னும் சுவை மிகுந்ததாக இருக்கும் குறிப்பாக குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏதாவது ஸ்பெஷலா செய்ய நினைத்தால் கண்டிப்பாக தர்பூசணி குல்பி செய்து பாருங்கள். உங்களுக்கான ரெசிப்பி இதோ....

தேவையான பொருட்கள்:

தர்பூசணி - 1 கப் நறுக்கியது

சர்க்கரை - சுவைக்கு ஏற்ப

எலுமிச்சை சாறு - 3 தேக்கரண்டி

குல்ஃபி அச்சு - 2 முதல் 3 வரை

செய்முறை :

தர்பூசணி குல்பி செய்ய, முதலில் தர்பூசணியை வெட்டி அதிலிருந்து அனைத்து விதைகளையும் அகற்றவும். இப்போது அனைத்து விதைகளையும் நீக்கிய பின், சிறிய துண்டுகளாக வெட்டவும்.

இப்போது இந்த சிறிய துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு சுவைக்கு ஏற்ப சர்க்கரை சேர்க்கவும். இந்தக் கலவை எவ்வளவு தடிமனாக இருக்கிறதோ, அவ்வளவு சுவையாகவும் இருக்கும்.

உங்களுக்கு பிடித்தது போல அதை வடிகட்டிக் கொள்ளலாம் அல்லது அப்படியே கூழ் போன்றும் பயன்படுத்தலாம்.

Tags

Read MoreRead Less
Next Story