காய்கறியே இல்லாமல் காரக்குழம்பு செய்வது எப்படி ?

காய்கறியே  இல்லாமல் காரக்குழம்பு செய்வது எப்படி ?

 காரக்குழம்பு

காய்கறி விலை அதிகமா இருக்குற நேரத்துல இந்த டிஷ் உங்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும். அது மட்டுமில்லாமல் அதிசீக்கிராமாவும் சிக்கனமாகவும் சமைக்க முடியும் .

வழக்கமா வெரைட்டி ரைஸ் னா ,லெமன் ,புளி ,தயிர் ,தக்காளினு ஒரே மாதிரி செஞ்சு எல்லாருக்குமே போர் அடிச்சுருக்கும்.அவங்களுக்குதான் இந்த பதிவு . பேச்சுலர்ஸ் ,பள்ளி குழந்தைகள் ,சுற்றுலா பயணிகளுக்கும் ஒரு வித்தியாசமான புது வித சுவையில் ஒரு டிஷ் தான் இது . தெரிந்து கொள்வோம் வாங்க .

தேவையான பொருட்கள்:

தாளிக்க :

எண்ணெய்-2குழிக்கரண்டி

கடுகு -1/4 டேபிள் ஸ்பூன்

சின்ன வெங்காயம் -150 கிராம்

தக்காளி -3

மிளகாய் தூள் -1 டேபிள் ஸ்பூன்

புளி -நெல்லிக்காய் அளவு

உப்பு -தேவையான அளவு

கருவேப்பிலை -2கொத்து

மசால் பொடி அரைக்க :

கட்டி பெருங்காயம் - சிறிதளவு

வெந்தயம் -1 டேபிள் ஸ்பூன்

சோம்பு -1 டேபிள் ஸ்பூன்

கடுகு-1 டேபிள் ஸ்பூன்

கொத்துமல்லி-1 டேபிள் ஸ்பூன்

சீரகம்-1 டேபிள் ஸ்பூன்

குண்டுமிளகாய்- 8

மிளகு -2 டேபிள் ஸ்பூன்

கசகசா-1 டேபிள் ஸ்பூன்

முந்திரி -10

செய்முறை :

முதலில் முந்திரி கசகசாவை சேர்த்து 10 நிமிடம் நன்கு ஊற வைத்துக் கொள்ளவும்.பின் மேலே கொடுக்கப்பட்டுள்ள அரைக்க தேவையான பொருட்களை ஒரு வாணலியை வைத்து பொன்னிறமாக வறுத்து எடுத்து நல்ல பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பின் கடாயில் இரண்டு குழி கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை பொறிந்ததும் உரித்த சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் தக்காளி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும். வதங்கியதும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும். பின் கெட்டியாக கரைத்து வைத்தபுளியை ஊற்றி கொதிய விடவும். கொதி வந்ததும் .ஊறவைத்த முந்திரி கசகசாவை அரைத்து சேர்க்கவும் . ஒரு கொதி வந்ததும்அரைத்து வைத்த மசாலாபொடியை சேர்த்து எண்ணெய் பிரிந்து மேலே திரண்டு வரும் வரை குறைந்த தீயில் வைத்து அடி பிடிக்காமல் கிளறவும் .சட்னி பதத்திற்கு வந்ததும் கொத்து மல்லி தழையை தூவி இறக்கினால் காரகுழம்பு தயார் .

Tags

Next Story