வீடே மணக்கும்... மீன் குழம்பு ...செய்வது எப்படி ?
மீன் குழம்பு
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ருசித்து ரசிச்சு சாப்பிட இப்படி ஒரு முறை மீன் குழம்பு செஞ்சு பாருங்களேன் ..
தேவையான பொருட்கள்:
மீன் – 1 கிலோ
பெ. வெங்காயம் – 1
சி. வெங்காயம் – 10
ப. மிளகாய் – 2
தக்காளி – 5
இஞ்சி, பூண்டு – 2 துண்டுகள்
புளி கரைசல் – ஒரு கப்
மிளகு – 2 டீ ஸ்பூன்
மல்லி – 2 டீ ஸ்பூன்
சீரகம் – 1 டீ ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
மஞ்சள் தூள் – 1 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீ ஸ்பூன்
தேங்காய் - 1 கப்.
கொத்தமல்லி, கருவேப்பிலை
உப்பு , எண்ணெய்
குறிப்பு :
மீன் துண்டுகளை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புளியை நீரில் அரைமணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
வரமிளகாய் - 10. தனியா - 2 டேபிள் ஸ்பூன்,சீரகம் - 1 டீஸ்பூன் நன்கு வறுத்து எடுத்து கொள்ளவும் .
பின் தனியாக கடாயில் என்னை ஊற்றி சின்ன வெங்காயம் - 10, தக்காளி -2 சேர்த்து வதக்கவும்.
இதனுடன் தேங்காய் - 1 கப் சேர்த்து அரிது வைத்து கொள்ளவும் .
செய்முறை:
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த
பின் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும்
தக்காளியை சேர்த்து பொன் நிறமாக வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, அத்துடன் தேவையான அளவு உப்பு,
தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.
குழம்பிலிருந்து எண்ணெய் தனியே பிரியும்போது, அதில் மீன் துண்டுகளை சேர்த்து கிளறி, 10 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து இறக்கவும்.
இப்போது அட்டகாசமான மீன் குழம்பு ரெடி .