மண்பானை அப்பளம் குழம்பு ரெசிபி !!

மண்பானை அப்பளம் குழம்பு ரெசிபி !!

 அப்பளம் குழம்பு 

அப்பளம் என்றலே யாருக்கு தான் பிடிக்காது. எல்லோருடைய விட்டிலும் பெரும்பாலான சைடிஷ் அப்பளமாக தான் இருக்கும். அப்பளம் வைத்து குழம்பு ரெடி பண்ணி இருகிங்களா ....இல்லையா அப்போ வாங்க எப்படி ரெடிப்பண்றதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சின்ன வெங்காயம் - 100 கிராம்

பூண்டு - 15 பல்

தக்காளி - ஒன்று

புளி சிறிய எலுமிச்சை பழ அளவு

தேங்காய் விழுது - ஒரு கப்

கடுகு உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்

வெந்தயம் - அரை டீஸ்பூன்

பெருங்காயம் - சிறிதளவு

கறிவேப்பிலை - தேவையான அளவு

குழம்பு மிளகாய்த்தூள் - 3 டேபிள்ஸ்பூன்

பொரித்த அப்பளம் - 10

செய்முறை :

மண்பானையில் என்னை சேர்த்து கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து அதனுடன் வெந்தயத்தை சேர்த்து வதக்கவும்.புலி கரைசலையும் குழம்பு பொடியும் சேர்த்து நன்கு பச்சை வாசம் போகும் வரை கொதிக்க வைக்கவும்.எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைத்து ஒரு தேங்காய் விழுதை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.பிறகு பொரித்து வைத்த அப்பளத்தை குழம்பில் சேர்க்கவும். மண்பானை அப்பளக் குழம்பு தயார்.

Tags

Next Story