முள்ளங்கி வாடையே இல்லாமல் சூப்பரான சட்னி
முள்ளங்கி சட்னி
பசியை உண்டாக்கி, மலச்சிக்கலைப் போக்கும். நீர்த்தடை, வயிற்று எரிச்சல், தொப்பை குறைய , குடைச்சல், வாதம், வீக்கம் சுவாசக்காசம்,
கபநோய், இருமல் இப்படி பட்ட நோய்களை குணமாக்க கூடிய முள்ளங்கியை சாம்பார் வைத்தால் குழந்தைகள் காய்களை
துக்கி எரிந்து விடுவார்கள் .அவங்களுக்குதாங்க இந்த அருமையான பதிவு .
தேவையான பொருட்கள் :
முள்ளங்கி – 2
சின்ன வெங்காயம் – 10 பல்
நல்லெண்ணெய்
கடுகு – 1/2 ஸ்பூன்
கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – இரண்டு கொத்து
வரமிளகாய் – 6
புளி – சிறிய எலுமிச்சை பழம் அளவு
பூண்டு பல் – 10
செய்முறை :
சின்ன வெங்காயம்,பூண்டு தோல் உரித்து, பொடியாக நறுக்கி நல்லெண்ணெய் ஊற்றி நன்கு வதக்கி கொள்ளவும் . பின்புதோல் சீவி பொடியாக நறுக்கிய முள்ளங்கியை சேர்த்து நன்றாக 2 நிமிடம் வதக்க வேண்டும். பின் புளி,வரமிளகாய்சேர்த்துவதக்கி இறக்கவும் . சூடு ஆறியதும்
சுவையான உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு நன்கு மைய அரைக்கவும்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றிஎண்ணெய் நன்றாக சூடானதும், கடுகு ,கடலைப்பருப்பு , உளுத்தம்பருப்பு கரு வேப்பிலை போட்டு தாளித்து இறக்கவும் .ஒரு கைப்பிடி அளவு கொத்து மல்லித்தழையை தூவினால் தரமான கமகமக்கும் முள்ளங்கிசட்னி தயார் .