கீரை கார்ன் வடை !!

கீரை கார்ன் வடை !!

Spinach Corn Vadai 

தேவையான பொருட்கள்:

ஸ்வீட் கார்ன் - 3

பொட்டுக்கடலை - 1/2 கப்

அவல் - 1/2 கப்

காய்ந்த மிளகாய் - 4

பச்சை மிளகாய் - 3

இஞ்சி - 1/2 அங்குலம்

முளைக்கீரை -1/2 கப்

சீரகம் 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரித்தெடுக்க

செய்முறை:

அவலை 5 முதல் 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், சீரகம், பொட்டுக் கடலை இவைகளை பொடித்து கொள்ள வேண்டும்.

பின்பு ஸ்வீட் கார்ன், உப்பு சேர்த்து வடை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

கீரையை பொடியாக நறுக்கி அரைத்த மாவுடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும் . அவலை நன்கு பிழிந்து மாவுடன் சேர்த்து வடையாக தட்டி கொள்ளவும்.

பின்பு ஒரு காடயில் எண்ணெய் ஊற்றி சூடு ஆன பிறகு தட்டி வைத்துள்ள வடையை பொரித்து எடுக்கவும்.

Tags

Next Story