இந்த வார சமையல் டிப்ஸ் !!

இந்த வார சமையல் டிப்ஸ் !!

சமையல் டிப்ஸ்

*பாகற்காயை அப்படியே வைத்தால் பழுத்து விடும் இதைத் தவிர்க்க காய்களை மேற்புறமும் அடிப்புறமும் வெட்டிவிட்டு இரண்டாக பிளந்து வைத்து விடவும் பாகற்காய் பல நாட்கள் வரை புழுக்காமல் இருக்கும் .

*மழை காலங்களில் உப்பில், ஈரக்கசிவு ஏற்படும். அப்படி ஆகாமலிருக்க சிறிது அாிசியை கலந்து வைக்கலாம்.

*வறுத்த ரவையில் தோசை சுட்டால் தோசை மொறு மொறுவென்று இருக்கும்.

*பலகாரங்கள் நமத்துப் போகாமலிருக்க பாத்திரங்களின் அடியில் உப்பு பொட்டலம் ஒன்றை போட்டு வைக்கலாம்.

*வீடு சமையலறையில் ஒரு டம்ளர் மண் நிரப்பி சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் ஊன்றி வைத்தால் அது துளிர்விட்டு வளர்ந்தும் அதன் வாடைக்கு பல்லி வரவே வராது. இதனால் தவறுதலாக சமையல் பொருட்களில்பல்லி விழுதல் தடுக்கலாம்.

*பாகற்காயில் கொஞ்சம் தயிர் ஊற்றி ஊறவிட்டு சிறிது நேரம் கழித்து வதக்கினால், அதிக கசப்பு இருக்காது. பொரியலும் சுவையானதாக இருக்கும்.

*சமைக்கும் போது பச்சை கொத்தமல்லியையும் கறிவேப்பிலையையும் ஒன்றாக வதக்கக் கூடாது. ஏனென்றால் பச்சையாக உணவில் சேர்த்தால் தான் அதில் இருக்கும் சத்துக்கள் உணவில் அதிகமாக இறங்கும் .

*எலிக்கு புதினா வாசனை பிடிக்காது .எனவே புதினாவையோ அல்லது புதினா எண்ணெயையோ அவை வரும் இடங்களில் வைக்கலாம் வெங்காயப் பேஸ்ட் மிளகாய் தூள் போன்ற்வற்றையும் நீரில் கலந்து தெளித்தால் கரப்பான் வராது.

Tags

Next Story