மோந்தா புயல்- இரவு 9 மணி முதல் காலை வரை போக்குவரத்து நிறுத்தம்!!

மோந்தா புயல்- இரவு 9 மணி முதல் காலை வரை போக்குவரத்து நிறுத்தம்!!
X

rain

மோந்தா புயல் காரணமாக ஆந்தாவில் கரையை கடக்கும் பகுதியில் இரவு 9 மணி முதல் காலை வரை போக்குவரத்து நிறுத்தப்படுவதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு அமராவதியில் உள்ள ஆர்.டி.ஜி.எஸ். அலுவலகத்தில் இருந்து மோந்தா புயல் குறித்து மீண்டும் ஒருமுறை ஆய்வு செய்தார். அப்போது நெல்லூர் மாவட்டத்தில் இதுவரை அதிக மழை பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த நான்கு மணி நேரத்தில் விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம் மற்றும் அனகப்பள்ளி மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. காக்கிநாடாவிலிருந்து 150 கி.மீ தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. புயல் இரவு 11.30 மணிக்குள் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. புயல் பாதித்த பகுதிகளில் இரவு 9 மணி முதல் சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்படும். போக்குவரத்து நிறுத்தம் காரணமாக நிறுத்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்க முதல்வர் உத்தரவிட்டார். கிராமம் மற்றும் வார்டு செயலகங்களில் 3,000 ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வாகனங்கள், JCBகள், நிவாரணப் பணிகளுக்கு கிரேன்கள், இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்ரு ஒவ்வொரு வாகனத்தையும் ஜே.சி.பி. யையும் அதிகாரிகள் நேரடியாகக் கண்காணிக்கின்றனர். சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கர்ப்பிணிப் பெண்களின் நல்வாழ்வைப் பற்றி விசாரித்த முதல்வர் அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Next Story