அதானி குழும முறைகேடு!: குற்றங்கள், ஊழல்களை அம்பலப்படுத்தும் ஒசிசிஆர்பி அமைப்பு புதிய ஆதாரங்கள் வெளியீடு!
அதானி
- தொழிலதிபர் கவுதம் அதானியின் குழும நிறுவனங்களின் முறைகேடுகள் குறித்து புதிய ஆதாரங்கள் வெளியானது. இதுவரை குற்றங்கள், ஊழல்களை அம்பலப்படுத்தும் ஒசிசிஆர்பி (OCCRP) என்ற அமைப்பு புதிய ஆதாரங்களை வெளியிட்டுள்ளது.
- மொரீஷியஸ், யு.ஏ.இ. போன்ற நாடுகளில் செயல்படும் அதானி குடும்ப முகமூடி நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் அம்பலமானது. பல்வேறு நிறுவனங்கள் மூலம் சிக்கலான வலைப்பின்னல் போன்ற கம்பெனி விவரங்களை ஒசிசிஆர்பி கண்டுபிடித்து வெளியிட்டுள்ளது.
- அதானி குடும்ப முறைகேடாக பல்லாயிரம் கோடி ரூபாயை வெளிநாடுகளுக்கு கொண்டு சென்றுள்ளது. முறைகேடாக கொண்டு சென்ற பணத்தை முகமூடி நிறுவனங்கள் மூலம் முதலீடு என்ற போர்வையில் இந்தியாவுக்கு கொண்டு சென்றது.
- கவுதம்அதானி சகோதரர் வினோத் மேற்பார்வையில் முறைகேடு:
- வெளிநாடுகளில் போலி நிறுவனங்களை தொடங்கி, இந்தியாவுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடாக கொண்டுவரப்பட்டுள்ளது.
- வெளிநாடுகளில் செயல்பட்ட அதானி குடும்ப முகமூடி நிறுவனங்களை அதானியின் சகோதரர் வினோத் கண்காணித்தார். அதானி குடும்ப நண்பர்கள் சாங் சுங்-லிங், நாசர் அலி ஆகியோர் மூலமாக பல முகமூடி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
- மேலும் பல முகமூடி நிறுவனங்கள் அம்பலம்:
- அதானியின் குடும்ப நண்பர்களான சாங் சுங் லிங்க், நாசர் அலி மூலம் மேலும் பல முகமூடி நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. மெர்ஜிங் இந்தியா ஃபோக்கஸ் ஃபண்ட்ஸ், இஎம் ரிசர்ஜன்ட் ஃபண்ட் என்ற மேலும் இரு முகமூடி நிறுவனங்கள் உள்ளன.
- சாங், நாசர் நடத்தும் குளோபல் ஆபர்ச்சுனிட்டீஸ் நிறுவனத்தால் எமர்ஜிங் இந்தியா, ரிசர்ஜன்ட் பண்டில் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மெர்ஜிங் இந்தியா மற்றும் இஎம் ரிசர்ஜன்ட் மூலம் இந்தியாவுக்குள் முதலீடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இரு நிறுவனங்களின் மூலம் கொண்டு வரப்பட்ட பணம் இந்தியாவில் அதானி குழும நிறுவனங்களின் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
- 2013-லிருந்து பல ஆயிரம் கோடி பணம் அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டதால் அவற்றின் விலை. முகமூடி நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்யப்பட்ட பணம் அதானி குடும்பத்தின் பணம்தான் என்று நிரூபணமாகி உள்ளது.
- 2014-ல் முகமூடி நிறுவனங்கள் 26 கோடி டாலரையும் 2017-ல் 43 கோடி டாலரையும் அதானி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. அதானி நிறுவனத்தின் முறைகேடுகள் தொடர்பாக 2013-ம் ஆண்டே பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபிக்கு புகார் அளிக்கப்பட்டது.
- 800 கோடி டாலரிலிருந்து 28,800 கோடி டாலராக உயர்வு:
- 2013-ல் அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு 800 கோடி டாலராக (ரூ.66,120 கோடி) இருந்தது. முறைகேடான முதலீடுகள் காரணமாக 2022-ல் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 28,800 கோடி டாலராக (ரூ.28,80,334 கோடி) உயர்ந்தது.
- அதானி – மோடி இடையே 20 ஆண்டு நட்பு.
Tags
Next Story