சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை

சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை
X

பிரதமர் மோடி மரியாதை

இந்தியாவை ஒருங்கிணைத்த சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் நாடு முழுவதும் ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை ஒட்டி தேசிய ஒற்றுமை தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. சர்தார் வல்லபாய் படேலின் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பிரதமர், ஏக்தா நகரில் நடைபெற்ற ராணுவ வீராங்கனைகளின் சாகச நிகழ்ச்சியையும், விமான படை சாகச நிகழ்ச்சியையும் கண்டு ரசித்தார். பின்னர் சந்திரயான் 3 வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக கலைநிகழ்ச்சி நடைபெற்றது. தேசிய ஒற்றுமை தின விழா கொண்டாட்டத்தை பிரதமர் மோடி. கண்டு களித்தார்.

Tags

Next Story