வாரிசுரிமை வரி திட்டத்தை முன்மொழிந்த காங்கிரஸ் : பிரதமர் மோடி பிரசாரம் !

வாரிசுரிமை வரி திட்டத்தை முன்மொழிந்த காங்கிரஸ் : பிரதமர் மோடி பிரசாரம் !

பிரதமர் மோடி

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில் மூன்றாம் கட்டத் தேர்தல் மே 7ஆம் தேதி 10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளில் நடைபெற உள்ளது.

மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடி கர்நாடகாவில் பெலகாவியில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர் காங்கிரஸ் காட்சியை கடுமையாக விமர்சித்தார். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு சட்ட ஒழுங்கு முற்றிலுமாக குழைந்து விட்டதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக தடை செய்யப்பட்ட பிஎப்ஐ போன்ற பயங்கரவாத இயக்கங்களை பயன்படுத்துவதாகவும், அவர்களை மறைமுகமாக ஊக்கப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.

தீவிரவாதிகளை கொன்றால் காங்கிரஸ் கட்சிக்கு கண்ணீர் வருகிறது என்றும் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். மேலும் அக்கட்சி மிகவும் ஆபத்தான வாரிசுரிமை வரி திட்டத்தை முன்மொழிந்துள்ளது என்றார்.

Tags

Read MoreRead Less
Next Story