நீருக்குள் மெட்ரோ சேவை.. பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
நீருக்கு அடியில் மெட்ரோ சேவை
இந்தியாவிலேயே முதன்முதலாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இந்தியாவிலேயே முதன்முதலாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ சேவையை மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார்.
அப்போது நீருக்கு அடியில் செல்லும் சுமார் ரூ.5,000 கோடி மதிப்பில் உருவாகியுள்ள மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
கொல்கத்தாவின் ஹவுரா மைதானம் முதல் எஸ்பிளனேடு மெட்ரோ பிரிவு வரையில் நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் பாதை கட்டமைக்கப்பட்டுள்ளது.
நீருக்கு அடியிலான இந்த மெட்ரோ ரயில் சேவை மூலம், கொல்கத்தா நகரத்தின் இரண்டு பரபரப்பான பகுதிகளை விரைவாக சென்றடைய முடியும்.
Next Story