பீட்ரூட்டா!! அடடே இவ்வளவு நன்மைகளா?
பீட்ரூட்
இரத்த விருத்தி காய் என அழைக்கப்படும் பீட்ரூட் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் ஆற்றலுடையது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், இரத்த அழுத்தத்தை குறைக்கும். அதுமட்டுமல்லாமல் இவை ஒரு சிறந்த ப்ரீ வொர்க்கொவுட் ட்ரிங்க் ஆகும். உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு பீட்ரூட் ஜூஸ் பருகுவதால் சிறப்பாக உடற்பயிற்சி செய்ய முடியும்.
நார்சத்து நிறைந்த பீட்ரூட்டானது கார்போஹைட்ரேட் சத்துக்களை உறிஞ்சும் தன்மையை மெதுவாக்குகிறது. அதனால் இரத்ததில் உள்ள சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதை கட்டுப்படுத்துகிறது. மேலும் இவற்றில் மாங்கனீஸ் சத்து நிறைந்திருப்பதால் இவை இயற்கையாகவே இன்சுலின் அளவை அதிகரிக்கிறது.
சில ஆய்வுகளின்படி பீட்ரூடில் இருந்து பெறப்பட்ட சில இரசாயனங்கள் கேன்சரை குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டது என கண்டறியப்பட்டது.
பீட்ரூடை அடிக்கடி எடுத்துக் கொள்வதோ, தினமுன் பீட்ரூட் ஜூஸ் குடித்தாலோ அவை நாளடைவில் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் கோளாறுக்கு வழிவகுக்கும். அதனால் அளவுடன் இருப்பது அவசியம்.