பிள்ளாநல்லூர் பள்ளியில் நாட்டு நல பணித்திட்ட முகாம்

பிள்ளாநல்லூர்  பள்ளியில் நாட்டு நல பணித்திட்ட முகாம்
X

முகாம்

பிள்ளாநல்லூர் பேரூராட்சி செங்குந்தர் மகாஜன பள்ளியில் நாட்டு நல பணித்திட்ட முகாம் நடைபெற்று வருகிறது.

டெங்கு ஒழிப்பு, மரம் வளர்ப்பு, மழை நீர் சேகரிப்பு, பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை பிள்ளாநல்லூர் பேரூராட்சி தலைவர் அ.சுப்பிரமணியம் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ரகோத்தமன், பேரூராட்சி வார்டு கவுன்சிலர் டி.ஏ.கீதா, மற்றும் ஆலம் தொண்டு நிறுவன தலைவர் கே.சி.தியாகராஜன் மற்றும் மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story