பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பூங்கா திறப்பு.

பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பூங்கா திறப்பு.
X

 பூங்கா திறப்பு. 

குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட இரண்டாவது வார்டு மற்றும் மூன்றாவது வார்டு பகுதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குமாரபாளையம் நகராட்சி சார்பில், விளையாட்டு பூங்கா கட்டுமான பணிகள் முடிவடைந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இந்த பூங்காவை நகராட்சி ஆணையாளர் சரவணன் முன்னிலையில் நகரமன்றத் தலைவர் விஜய கண்ணன் திறந்து வைத்தார். பின்னர் அங்கு இருந்த விளையாட்டு உபகரணங்களை பார்வையிட்ட பிறகு சறுக்கல் விளையாட்டு விளையாடி நகர மன்ற தலைவர் விஜய கண்ணன் மகிழ்ந்தார். அவருடன் மற்ற நகர மன்ற உறுப்பினர்களும் சறுக்கல் விளையாட்டு விளையாடினர். நிகழ்ச்சியில் நடைபெற்ற உறுப்பினர்கள் ஜேம்ஸ்,இனியா, ராஜு மற்றும் வேல்முருகன் பொறியாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story