இந்திய அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு பரப்புரை மாநாடு குறித்த கலைப்பயண நிகழ்ச்சி
கலைப்பயண நிகழ்ச்சி
இராசிபுரத்தில், இந்திய அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு பரப்புரை மாநாடு குறித்த கலைப்பயண நிகழ்ச்சி நடந்தது. மதுரையில் வரும் 17 ஆம் தேதி இந்திய அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு பரப்புரை மாநாடு நடக்கிறது.
இதுகுறித்த கலைப் பயண நிகழ்ச்சி கடந்த 2 ஆம் தேதி தொடங்கி வரும் 16 ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பஸ் நிலையம், மற்றும் புதிய பஸ் நிலையம் அருகே, கலைப்பயண நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாநாட்டின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே கலைநிகழ்ச்சி மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தொடர்ந்து மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என கலைப் பயண குழுவினர் பாடல்கள் பாடி நடனத்தின் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்வில் பா.ராஜா முகமது, இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலாளர் எஸ். மணிமாறன், மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் நிஜார்பாஷா, மற்றும் முகமது இக்பால், காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பாச்சல் சீனிவாசன், மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.