தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

எண்ணும் எழுத்தும் பயிற்சி

வெண்ணந்தூர் வட்டார வளமையத்தில், தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடந்தது.

வெண்ணந்தூர் வட்டார வளமையத்தில் தொடக்கநிலை 2ம்கட்ட பயிற்சி 1 முதல் 3ம்வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சியானது 03.10.23 முதல் 04.10.23 ஆகிய இரண்டு நாட்கள் நடந்தது. 4 மற்றும் 5ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான எண்ணம் எழுத்து பயிற்சி 05.10.23 முதல் 06.10.23ஆகிய இரண்டு நாட்கள் நடந்தது. இப்பபயிற்சியினை, நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ஆ.மணிவண்ணன், வட்டார கல்வி அலுவலர் கா.வளர்மதி மற்றும் வெண்ணந்தூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் மா.சுந்தரராஜன் ஆகியோர் தொடக்கி வைத்து எண்ணும் எழுத்தும் பயிற்சி சிறப்பு அம்சங்களை எடுத்துரைத்தனர். இப்பயிற்சியில் செயல்பாட்டு ஒளியாக அனைத்து பாடங்களையும் எளிதாக கற்பிக்க பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் கற்றல்- கற்பித்தல் திறன் சார்ந்த நுட்பங்கள், கற்றல் விளைவுகள் மற்றும் பாடவாரியாக கற்றல் கற்பித்தல் துணை கருவிகளின் பயன்பாடு ஆகியவை குறித்து விளக்கப்பட்டது. பயிற்சியில் தொடக்கநிலை தலைமை ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்கள் உட்பட 115 நபர்கள் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்கள் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.

Tags

Next Story