மின் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

X
ஆர்ப்பாட்டம்
திமுகவின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மேற்கு பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய கூட்டு குழு சங்கங்கள் சார்பில் ஏழு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அண்ணா தொழிற்சங்க செயலாளர் துரை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டம் முழுவதும் இருந்து 200க்கும் மேற்பட்ட மின்வாரிய தொழிலாளர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளான ஊதிய உயர்வு தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மின்வாரியத்தில் ஆரம்ப நிலை பணியிடங்களை நிரப்பி விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி விடியா திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags
Next Story
