வேலாயுதம்பாளையம் அருகே மக்களை தேடி மருத்துவ முகாம்

வேலாயுதம்பாளையம் அருகே மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது.

கரூர் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே, காந்திநகர் சுற்றுவட்டார பகுதிகளில் சுகாதாரத் துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இத்திட்டத்தின் கீழ், அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாக சென்று, வீடுகளில் உள்ள முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், உடல் பரிசோதனை, தலைவலி, காய்ச்சல், உடல் வலி, சளி, இருமல் உள்ளிட்ட பரிசோதனைகள் நடைபெற்றது. மேலும், நோய்கள் தாக்காமல் இருப்பதற்கு சுகாதாரத்தை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

அப்போது, தற்போது மழைக்காலமாக இருப்பதால், வீடுகளை சுற்றி மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தொட்டிகளில் உள்ள தண்ணீரை திறந்து வைக்காமல் மூடி வைக்க வேண்டும். கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க வேண்டும். இவ்வாறு, நடவடிக்கை மேற்கொண்டால் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களிலிருந்து காத்துக் கொள்ளலாம் எனவும் முகாமை நடத்திய ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பொது மக்களுக்கு விளக்கி கூறினர்.

Tags

Next Story