மனுதாரர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் ஆட்டோ ஓட்டுனர்கள்

மனுதாரர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் ஆட்டோ ஓட்டுனர்கள்
X
ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் அராஜகம்
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் அலுவலகம் மட்டுமில்லாமல் 36 துறை சார்ந்த அலுவலகங்கள் செயல்பட்டுவருகிறது. ஒவ்வொரு துறை சார்ந்த அலுவலகங்களுக்கும் நாள் ஒன்றிற்கு சுமார் 20 முதல் 50 பேர் வரை பயனாளர்கள் மற்றும் பொது மக்கள் வந்து செல்வது வழக்கம். மேலும் வாரம்தோறும் திங்கள் கிழமை இங்குள்ள கூட்டரங்கில் ஆட்சியர் தலைமையில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்திற்கு மாவட்டம் முழுவதுமிருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு அளிக்கவரும் நிலையில் இங்குள்ள வாயிலை மறித்துக்கொண்டு சேர் ஆட்டோ ஓட்டுநர்கள் சவாரி ஏற்றுவதற்காக போட்டிபோட்டு முந்தியடித்து முன்னே நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதுடன், வாகனங்கள் விபத்தை ஏற்படுத்தும் விதமாக இயக்குகின்றனர். மேலும் ஆட்சியர் அலுவலக வாயிலில் பணியில் இருக்கும் காவலர்களும் இதனை கண்டுகொள்ளாததால் விதிமுறைகளை மீறி நிறுத்தி ஆட்டோக்கள் பயனிகளை ஏற்றி பெரும் இடஞ்சலை ஏற்படுத்துகின்றனர். எனவே காவல்துறையினர் ஆட்டோக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
Next Story