முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி வருகை அமைச்சர்கள் மலர் தூவி வரவேற்பு.
திருப்பூருக்கு முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தி வருகை அமைச்சர்கள் மலர்தூவி வரவேற்பு திருப்பூருக்கு முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தி வந்தது. இதனை அமைச்சர்கள் மலர்தூவி வரவேற்றனர். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, எழுத்தாளர் கலைஞர் குழுவின் சார்பில், திருப்பூர் மாநகராட்சி, முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையத்திற்கு நேற்று வருகை புரிந்த முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தியினை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் மலர்தூவி வரவேற்று, டாக்டர் கலைஞர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதற்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இது குறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது:& முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, அதனை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடிடும் நோக்கில், தமிழ்நாடு முதலமைச்சரால் 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றாக, எழுத்தாளர் கலைஞர் குழுவின் சார்பில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகள் மற்றும் அவரது பரிமாணங்களை போற்றிடும் வகையில், பல்வேறு முன்னெடுப்புக்கள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் புகழுக்கு புகழ் சேர்க்கின்ற வகையிலும், இன்றைய இளம் தலைமுறையினர்களுக்கு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பன்முகத்தன்மையை எடுத்துக்கூறும் வகையிலும், எழுத்தாளர் கலைஞர் குழுவின் சார்பில், கலைஞர் புகழ் பாடும் முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தி தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த அலங்கார ஊர்தியின் வாயிலாக, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பன்முக ஆற்றலையும், அவர் தமிழ் சமூகத்திற்கு படைத்தளித்த மக்கள் நலத்திட்டங்களையும் தமிழகம் முழுவதும் பரைசாற்றுகின்ற வகையில் அனைத்து மாவட்டங்களுக்கு பயணிக்கின்ற வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 4&ந் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தி துவக்கி வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இந்த அலங்கார ஊர்தியானது பயணிக்கப்பட்டு, திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ளது. அதில், திருப்பூர் மாவட்டத்தில் மாநகராட்சிக்குட்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையத்தில் தொடங்கப்பட்டு, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரிலும், காங்கேயம் நகராட்சி பேருந்து நிலையம் பகுதியில் இவ்வூர்தியானது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, புகழை போற்றுகின்ற வகையில், எழுத்தாளர் கலைஞர் குழுவின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நிகழ்வுகளில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் படைப்புக்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், துணை மேயர் பாலசுப்பிரமணியன், திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) ராம்குமார், திருப்பூர் மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் இல.பத்மநாபன் (4-ஆம் மண்டலம்), கோவிந்தசாமி (3-ஆம் மண்டலம்) கோவிந்தராஜ் (2-ஆம் மண்டலம்), மகேஷ்வரி (1-ஆம் மண்டலம்), மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதா தேவி, மாநகராட்சி துணை ஆணையர் சுல்தானா மற்றும் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், அவைத்தலைவர் நடராஜன், மாநில மகளிர் அணி பிரசாரகுழு செயலாளர் உமா மகேஷ்வரி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கலைச்செல்வி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ், கவுன்சிலர்கள் செந்தூர் முத்து, பி.ஆர்.செந்தில்குமார், ராதாகிருஷ்ணன், திவாகரன் மற்றும் பகுதி செயலாளர்கள் மேங்கோ பழனிச்சாமி, குமார், ராமதாஸ், போலார் சம்பத், மு.க.உசேன், மின்னல் நாகராஜ், ஜோதி, கோவிந்தராஜ், மியாமி அய்யப்பன், முருகசாமி, மாநகர இளைஞரணி அமைப்பாளர்கள் எம்.எஸ்.ஆர்.ராஜ், முத்துக்குமார், நிர்வாகிகள் ஈஸ்வரமூர்த்தி, சிவபாலன், மற்றும் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தியை காண பள்ளி மாணவ&மாணவிகள் பலர் வருகை தந்தனர். அவர்களுக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்வழி செல்வராஜ் மற்றும் செல்வராஜ் எம்.எல்.ஏ-., மேயர் தினேஷ்குமார் ஆகியோர் பேனா பரிசு கொடுத்தனர்.
Next Story