வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

மாவட்ட ஆட்சியர் 

வாக்காளர் சிறப்பு முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் - மாவட்ட ஆட்சியர்

சிவகங்கை மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணைத்தின் அறிவுரையின்படி 01.01.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் / நீக்கம் / முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கான சிறப்பு முகாம்கள் 04.11.2023 மற்றும் 05.11.2023 ஆகிய தேதிகளில் முதற்கட்டமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், தமிழக அரசால் 18.11.2023 அன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, 18.11.2023 மற்றும் 19.11.2023 நாட்களில் நடைபெறவிருந்த சிறப்பு முகாம்கள், வருகின்ற 25.11.2023 (சனிக்கிழமை) மற்றும் 26.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் நடைபெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்படி, சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவர்கள் மூலமாக நேரடியாகவும் மற்றும் இணையதள வழியாகவும் (Voters Helpline செயலி / https://voters.eci.gov.in மற்றும் https://elections.tn.gov.in) விண்ணப்பிக்கலாம். மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிட்ட கால அட்டவணையின்படி 27.10.2023 முதல் 09.12.2023 வரையிலான நாட்களில் வருவாய் கோட்டாட்சியர் சிவகங்கை / தேவகோட்டை அலுவலகத்தில் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம். எனவே, இந்த வாய்ப்பினைப் பொதுமக்கள் அனைவரும் தவறாது பயன்படுத்திக் கொண்டு,

மேற்கண்ட நாட்களில் நடைபெறும் முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Next Story