உடல் முழுவதும் விளக்குகளை ஏற்றியவாறு யோகாசனங்கள் செய்த மாணவர்கள்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஆண்டாள் புரத்தில் செயல்படும் தனியார் பள்ளி சார்பில் திருக்கார்த்திகையை முன்னிட்டு விழிப்புணர்வு யோகாசனங்கள் செய்து காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

உலக அமைதி வேண்டி பள்ளியின் உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 4, 5 மற்றும் 6ம் வகுப்பு பயிலும் 8 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த மாணவ, மாணவியரின் உடல் முழுவதும் 50 க்கும் மேற்பட்ட தீபங்கள் ஏற்றிய நிலையில், பத்மாசனம், சிரசாசனம், பத்ராசனம், உபநிடத கோணாசனம், உட்கட்டாசனம், பச்சி மோதாசனம் உள்ளிட்ட ஆசனங்களை செய்து காட்டினர்.

இது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. உடலுக்கும் மனதுக்கும் பலமளிக்கும் யோகாசனத்தை உலக மக்கள் அனைவரும் பயின்று, சண்டை, போர் பதற்றம் இல்லாமல், ஒருவருக்கொருவர் அன்பு பாராட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப் பட்டதாக யோகா பயிற்சியாளர் பூசைத்துரை தெரிவித்தார். ப

Tags

Next Story