ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பாதையை மீட்க கோரிக்கை..!

ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பாதையை மீட்க கோரிக்கை..!

ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடம்

நடப்பதற்கு பாதை வேண்டும்.. ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பாதையை மீட்டுக் கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்டுள்ளது.

திருவண்ணாமலை வட்டம் திருக்கோவிலூர் மெயின் ரோட்டில் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பாளர்களால் புதிதாக கட்டிடம் கட்ட கடைக்கால் எழுப்பும் பணி நடைபெற்றது. தகவல் அறிந்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வந்து தடுத்து நிறுத்தினர், அதிகாரிகளை அவமதிக்கும் வகையில் ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ந்துபணியை மேற்கொண்டதால் நெடுஞ்சாலை துறைக்கும்,

ஆக்கிரமிப்பாளர்கள் துரை, பிரவீன் குமார், கலா ஆகியோர்க்கிடையே மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் அத்துமீறி கட்டிடம் கட்டும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து புகார்மனு அளித்துள்ளனர்.

மேலும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் உபயோகிக்கும் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டுவது குறித்து எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு அதிகாரிகள் நடைபாதையை மீட்டு தர வேண்டும் என்று அப் பகுதி மக்களும் ,சமூக ஆர்வலர்களும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Tags

Next Story