ஹிந்து முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டம்
கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் அருகே ஹரி மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு ஹிந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். ஹிந்து முன்னணி மாநில செயலாளர் மனோகர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். கூட்டத்தில் வரும் 21 அன்று மாலை 4:00 மணிக்கு, மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடக்கும் கோவில்களை மட்டும் சீரழிக்கும் அரசே, கோவிலைவிட்டு வெளியேறு எனும் கோரிக்கைக்கான மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. சங்கராபுரம் பொறையூர் கிராமத்தில் 40 ஏக்கர் மனையை ரூ.5 லட்சம் கொடுத்து கிறிஸ்தவர்களுக்கு தாரை வார்த்த தமிழக அரசை கண்டிப்பது, தியாகதுருகம் மலைக்கோவில், சித்தலுார் பெரியநாயகி, கல்வராயன்மலை சின்னத்திருப்பதி கோவில்களில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story