கரூர் அருகே அதிகாலையில் தூக்க கலக்கத்தில் மரத்தின் மீது கார் மோதி விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழப்பு.

கரூர் அருகே அதிகாலையில் தூக்க கலக்கத்தில் மரத்தின் மீது கார் மோதி விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழப்பு.
கரூர் அருகே அதிகாலையில் தூக்க கலக்கத்தில் மரத்தின் மீது கார் மோதி விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழப்பு. ஈரோடு மாவட்டம், சூலை, ஜி கே ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ் மகன் கிருஷ்ணகுமார் வயது 40. இவர் இவருக்கு சொந்தமான வேகன் ஆர் காரில் மனைவி மோகனா வயது 40, மகள் வருணா வயது 10, மகன் சுதர்சன் வயது 15, மாமியார் இந்திராணி வயது 67 ஆகியோருடன் ஜூலை 20ஆம் தேதி குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுள்ளனர். மீண்டும் சொந்த ஊரான ஈரோட்டிற்கு செல்வதற்காக மதுரை-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை வந்து கொண்டு இருந்தனர். இவர்களது கார், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, ஆண்டிப்பட்டி கோட்டை அருகே உள்ள ஒரு ஹோட்டல் எதிர் புறம் அதிகாலை 3:30- மணி அளவில் வந்தபோது, காரை ஓட்டி வந்த கிருஷ்ணகுமார் தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதால், சாலையோர மரத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரின் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி கிருஷ்ணகுமார் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து காரில் பயணித்த இவரது மகள் வருணா மற்றும் மாமியார் இந்திராணி ஆகிய இருவரும் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தனர். மனைவி மோகனாவிற்கு தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. மகன் சுதர்சனுக்கு இடது காலில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் அறிந்த அரவக்குறிச்சி காவல் துறையினர், தீயணைப்பு நிலைய வீரர்கள்,108 ஆம்புலன்ஸ் ஆகியோர் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ,காயம் அடைந்த வரை கரூரில் உள்ள அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் கரூர் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story