அண்ணாமலை மற்றவர்களுக்கு அன்புடன் அண்ணா எனக்கு அன்புடன் தம்பி-வானதி சீனிவாசன்.
Coimbatore (south) King 24x7 |22 July 2024 10:16 AM GMT
நாடாளுமன்ற தேர்தலில் உற்று நோக்கபட்ட தொகுதி கோவை எனவும் பேச்சு
கோவை நாடாளுமன்ற தொகுதியில் கடந்த தேர்தலில் பீப்பிள்ஸ் பார் அண்ணாமலை என்ற அமைப்பு வாய்ஸ் ஆப் கோவை ஏற்படுத்தபட்டு நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் ஏராளமான தன்னார்வர்கள் ஈடுபடுத்தபட்டனர்.அந்த அமைப்பினருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கோவை குஜராத் சமாஜ் மண்டபத்தில் Modi 3.0 என்ற நிகழ்வு தன்னார்வலர்களுக்காக நடத்தப்பட்டது.இதில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.அப்போது நாடாளுமன்ற தேர்தலில் பணி புரிந்த அந்த அமைப்பினருக்கும் பாஜக நிர்வாகிகளும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பேசிய வானதி சீனிவாசன் “அண்ணாமலை உங்களுக்கு அன்புடன் அண்ணா ஆனால் எனக்கு அன்புடன் தம்பி என்றவர் அரசியல் தெரியாதவர்கள் கூட அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் என்பதால் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். குடும்பம்,குழந்தைகளை விட்டு அனைவரும் இந்தியாவில் வேலை பார்த்த காரணத்தினால் தான் மோடி இன்று ஆட்சியில் அமர்ந்து இருக்கிறார் என்றார்.கட்சிக்கும் செயலி உள்ளதாகவும் வாய்ஸ் ஆப் கோவை என்கிற செயலியும் கட்சியின் செயலியும் இணைந்து வேலை செய்யும் போது தான் வெற்றி கிடைக்கும் எனவும் புதிதாக வந்தவர்கள் இத்தனை வருஷம் நீங்க என்ன செய்தீர்கள்?வாக்கு வாங்கி கொடுத்தீர்களா? எனக் கேட்டால் அங்கு வேலை நடக்காது. அனைவரும் ஒன்றிணைத்து செயல்பாட்டால் தான் வெற்றி கிடைக்கும் என்றவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் உற்று நோக்கிய தொகுதி கோவை என்றார். அண்ணாமலை வெற்றி பெறுவாரா என நாடு முழுவதும் இருந்த பலர் என்னிடம் கேட்டார்கள் எனவும் பொது வாழ்க்கையில் தொடர்ச்சியாக இயங்குவதும், மக்களுக்கு தொண்டு ஆற்றுவதும் தான் கடமை.வாய்ஸ் ஆப் கோவை அமைப்பும் பாஜகவும் சேர்ந்து செயல்பட்டால் நல்லது நடக்கும் எனவும் தர்மத்திற்காக வேலை பார்ப்பவர்கள் நாம் என்ற அவர் நாடும்,சமுதாயமும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக வேலை பார்த்து வருகிறோம் என தெரிவித்தார்.வாய்ஸ் ஆப் கோவை அமைப்பினரை மட்டும் அழைத்து பாராட்டி இருந்தால் அண்ணாமலை தனியாக கட்சி ஆரம்பித்து விட்டார்கள் என புரளி கிளப்பி விட்டு இருப்பார்கள்.ஆனால் பாஜக நிர்வாகிகளையும் இங்கு அழைத்திருப்பதால் அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
Next Story