குருவி குஞ்சு கதை கூறிய அண்ணாமலை!
Coimbatore (south) King 24x7 |22 July 2024 12:15 PM GMT
கோவையில் வெற்றி தள்ளி போய் இருக்கிறது-தோல்வி என நினைக்க வேண்டாம் என பேச்சு.
கோவை நாடாளுமன்ற தொகுதியில் தேர்தலில் பாஜகவிற்காக பணியாற்றிய பீப்பிள்ஸ் பார் அண்ணாமலை அமைப்பினருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கோவை குஜராத் சமாஜ் மண்டபத்தில் Modi 3.0 என்ற நிகழ்வு நடத்தப்பட்டது.இதில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை,தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை தன்னார்வலர்கள் எல்லாவற்றையும் வெளிப்படையாக பேச வேண்டிய அவசியம் இல்லை எனவும் ரகசியம் என்பது தேவை என்ற அவர் சிலவற்றை மூடிய அரங்கில் பரிமாறிக் கொள்ளலாம் என தெரிவித்தார்.தேர்தல் சமயத்தில் 17 மணி நேரம் வரை வேலை பார்த்து உள்ளீர்கள் என தன்னார்வலரகளை பாராட்டிய அவர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து அனுப்பிய சம்பவங்களுக்கும் உங்களுக்கு தெரியும் என்றார்.நாடாளுமன்ற தேர்தல் பணியை அடுத்து மக்களின் மன நிலை,அரசியல் அனைத்தும் உங்களுக்கு தெரிய வந்து இருக்கும் என்றவர் ஜனநாயகம் மெதுவாக தான் நகரும் அப்படி தான் இந்தியாவில் உள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் தப்பானவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் 5 வருடம் கழித்து ஜனநாயகம் அவர்களை மாற்றி விடும் என குறிப்பிட்டார். போலீஸ் ஆபிசராக இருந்தபோது எது சரி எது தவறு என்ற முடிவை மட்டும் எடுக்க முடிந்தது. ஆனால் வாழ்க்கையில் கடந்த 3 ஆண்டுக்கள் மிகவும் கடினமானது என்றவர் 37 ஆண்டுகள் முடிவெடுப்பது என்பது சுலபமாக இருந்ததாகவும் மூன்று ஆண்டுகளாக அரசியல் கட்சித் தலைவர் ஆன பிறகு கடினமாக இருந்தது என அவர் தெரிவித்தார்.எதற்கும் எதிர்வினை ஆற்ற முடியாத நிலையில் இருக்கிறேன் என்றவர் சில சமயங்களில் அரசியலில் தொடர்ந்து இருக்கணுமா?? என்ற எண்ணம் என் மனதில் எழுந்தது என கூறிய அண்ணாமலை அரசியலுக்கு வர வேண்டும் என்றால் பொறுமை, சகிப்புத்தன்மை,சமரசம் போன்றவை வேண்டும் என அறிவுரை வழங்கினார்.தொடர்ந்து பேசிய அவர் மோடியின் வாழ்க்கையை உன்னிப்பாக கவனித்தால் தெரியும் அவர் மிகப்பெரிய பாரத்தை சுமந்து வருகிறார் என குறிப்பிட்டார். கோவையில் வெற்றி தள்ளி போகியுள்ளது எனவும் தோல்வி என நினைக்க வேண்டாம் எனவும் தேர்தலை ஆன்மிக பயணமாக தான் நாம் அணுகினோம் என்றார்.நான்கு லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் மிக முக்கியமானது எனவும் நம்பிக்கை அளிக்கும் வாக்குகள் இவை என தெரிவித்தார். இன்று நாம் வேர்களை பலப்படுத்தி வருகிறோம் எனவும் 33% பூத்துகளில் முதல் அல்லது 2 வது இடத்திற்கு வந்துள்ளோம் எனவும் நாம் செய்யக்கூடிய வேலை தொடர்ந்து செய்ய வேண்டும் என பேசினார்.தொடர்ந்து பேசிய அவர் அரசியலில் ஒரு கலை என்றால் அது சமரசம் செய்வது தான் தினமும் கத்தி சண்டை போட முடியாது என தெரிவித்தார். என்னுடைய செயல்பாடுகளும் சில சமயங்களில் கோபம் வர வைக்கலாம் என கூறிய அண்ணாமலை எப்போதும் 5 ஆவது கியரில் செல்லக் கூடாது கொஞ்ச காலத்திற்கு தன்னார்வலர்கள் 3வது கியரில் இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். தன்னார்வலர்கள் தனித்துவத்தை இழக்க கூடாது என அறிவுறுத்திய அண்ணாமலை எங்களுக்கு அறிவரை சொல்லும் வேலை உங்களுக்கும் இருக்கிறது எனவும் நாங்கள் சோர்வடையும் போது நேர்மையாக இருங்கள் என கூற எங்களுக்கு நீங்கள் இருக்க வேண்டும் என கூறினார்.Voice of Covai பயணம் தேசியத்துடன் பயணிக்க வேண்டும் என தெரிவித்த அண்ணாமலை குருவி குஞ்சை ஒப்பிட்டு குட்டி கதை கூறி தனது உரையை முடித்தார். தன்னார்வலர்கள் என்றும் தனித்துவத்தோடு நடுநிலையாக செயல்பட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.பீப்பிள்ஸ் பார் அண்ணாமலை அமைப்பு வாய்ஸ் ஆப் கோவை என மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
Next Story