அணைக்கட்டில் நாளை மின்நிறுத்தம்!

அணைக்கட்டில் நாளை மின்நிறுத்தம்!
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு மற்றும் பள்ளிகொண்டா சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா மின் கோட்டத்திற்குட்பட்ட அணைக்கட்டு, மற்றும் பள்ளிகொண்டா துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கெங்கநல்லூர், ஊனை வாணியம்பாடி, அணைக்கட்டு, அப்புக்கல், ஊனை, கந்தனேரி, ராமாபுரம், வரதலம்பட்டு, கரடிகுடி, டி.சி.குப்பம், ஓங்கப்பாடி, குடிசை புலிமேடு அத்தியூர், சிவநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், பள்ளிகொண்டா, வெட்டுவாணம், பிராமணமங்கலம், வேப்பங்கால், கிழாச்சூர், ஈடியார்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என பள்ளிகொண்டா மின்வாரிய செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
Next Story