மத்திய பட்ஜெட்-இந்திய தொழில் கூட்டமைப்பின் கோவை மண்டலம் வரவேற்பு!

மத்திய பட்ஜெட்-இந்திய தொழில் கூட்டமைப்பின் கோவை மண்டலம் வரவேற்பு!
அனைத்து துறைகளின் வளர்ச்சியினை நோக்கமாக கொண்ட பட்ஜெட்டாக உள்ளதாக பேட்டி.
கோவை:மத்திய நிதி அமைச்சர் இன்று அறிவித்துள்ள பட்ஜெட்டின் அம்சங்களை வரவேற்பதாக இந்திய தொழில் கூட்டமைப்பின் கோயம்புத்தூர் மண்டல சேர்மன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியபோது அனைத்து துறைகளின் வளர்ச்சியினை நோக்கமாக கொண்ட பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் வேளாண்மை,சிறு குறு தொழில், இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் மகளிர் பங்களிப்பு உள்ளிட்ட ஒன்பது நோக்கங்களை மையமாகக் கொண்டு இந்த பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.குறிப்பாக, வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக ஒரு கோடி மதிப்பீட்டில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கோயம்புத்தூரைச் சேர்ந்த தொழில்துறையினர் பயன்பெறும் விதமாக ஃபெர்ரஸ் மற்றும் காப்பர் உலோகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது எனவும் இதனால் ஸ்கிராப் தொழில் மேம்படும் என்ற அவர் மூலப் பொருட்கள் விலையும் குறைய வாய்ப்புள்ளதால் உற்பத்தி அதிகரிக்கும் என்றார்.தங்கத்திற்கான சுங்கவரி குறைக்கப்பட்டுள்ளது வரவேற்பதாகவும் இது தங்கம் உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி பயன்பாட்டாளர்களுக்கும் பயனளிக்கக்கூடிய அம்சமாகும் என்றவர் சிறு குறு தொழில்களுக்கான கடன் உதவியை வங்கிகளிடம் பெறுவது எளிமைப்படுத்தப்பட்டுள்ளதால் சிறு குறு தொழில்களை விரிவு படுத்த இது உதவி செய்யும் எனவும் நாட்டின் கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 11 லட்சம் கோடி எனும் பெரும் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.இது தொழில்துறையினர் வளர்ச்சி,பொருளாதார மேம்பாடு மற்றும் மக்களின் வளர்ச்சிக்கும் உதவும்.அந்த வகையில் இந்த பட்ஜெட் அனைத்து துறையினருக்குமான பட்ஜெட்டாக அமைந்துள்ளது' எனவும் தெரிவித்தார்.
Next Story