முதலமைச்சர் குறித்து அவதூறு பேசிய சிவி சண்முகம் தொடர்பான வழக்கு

முதலமைச்சர் குறித்து அவதூறு பேசிய சிவி சண்முகம் தொடர்பான வழக்கு
அடுத்த மாதம் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில் மே மாதம் 1 ஆம் தேதியும், ஆரோவில் 10 ஆம் தேதியும், விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் தமிழக அரசையும், தமிழக முதல்வரையும், தரக்குறைவாகவும் அவதூறாக விமர்சித்து பேசியதாக புகார் எழுந்ததை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் சுப்பரமணியம், மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் ஏற்கனவே ஆறு முறைகளுக்கு மேல் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் ஆஜராகிய நிலையில் மீண்டும் இன்று விழுப்புரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிவி சண்முகம் நேரில் ஆஜராகினார். அப்போது இந்த வழக்குகளில் உயர்நீதிமன்றம் மூலம் தடையானை பெற்றுள்ளதாக சிவி சண்முகம் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்த போது அதற்கான ஆணை எங்களிடம் வரவில்லை என்பதால் பிராமண பத்திரம் தாக்கல் செய்யுங்கள் என கூறி நீதிபதி ராதிகா வழக்கு விசாரனையை 13.08.2024 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Next Story