இரு கைகளை கூப்பி "அப்பா சாமி ஆளை விடுங்க"- அன்புமணி ராமதாஸ்!

இரு கைகளை கூப்பி அப்பா சாமி ஆளை விடுங்க- அன்புமணி ராமதாஸ்!
பட்ஜெட் குறித்து தொடர் கேள்விகள் எழுப்பியதால் ஆவேசம்.
கோவை விமான நிலையத்தில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் கொங்கு மண்டலம் என்றாலே தொழில் வளம் கொழிக்கும் இடம் தற்பொது மின்சார கட்டணம் உட்பட பல்வேறு காரணங்களால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.மின்கட்டண உயர்வு சிறு,குறு தொழில்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்த அவர் 23மாதங்களில் 3 முறை மின் கட்டணம் உயர்த்தபட்டுள்ளது எனவும் மின் கட்டண உயர்வை தமிழக திரும்ப பெற வேண்டும் எனவும் தெரிவித்தார்.கட்டண உயர்வால் 7.5 கோடி மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் மின் கட்டணத்தை அரசு திரும்ப பெற வில்லை எனில் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தார். ஆட்சிக்கு வந்தவுடன் மாதம் தோறும் மின்கட்டணம் கணக்கீடு செய்யப்படு்ம் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்.ஆனால் இது வரை நடைமுறைபடுத்த வில்லை எனக்கூறிய அவர் மாதம் தோறும் மின்கட்டணம் கணக்கிட்டால் 18 முதல் 20 விழுக்காடு கட்டணம் குறையும் எனவும் தெரிவித்தார். காவிரியில் இருந்து வரும் தண்ணீரால் இரு தினங்களில் மேட்டூர் அணை நிரம்பிவிடும் நிலையில் நீரை எப்படி பயன்படுத்துவது என இவர்களுக்கு தெரியவில்லை என்றார்.தருமபுரி -காவிரி உபரி நீர் திட்டம்,நல்லாறு,பாம்பாறு, காவிரி குண்டாறு திட்டம் போன்றவை செயல்படுத்த வேண்டும் என தெரிவித்த அவர் குறுவை சாகுபடி சரியான முறையில் நடக்கவில்லை எனவும் தெரிவித்தார், கோவை பகுதியில் கனிமவள கொள்ளை மிகப்பெரிய அளவில் நடைபெறுவதாகவும் செங்கல் சூளை உட்பட பல்வேறு விவகாரங்களில் அரசு மெத்தனமாக இருப்பதாக குற்றம்சாட்டினார். கோவை மாநகரில் 80 விழுக்காடு சாலைகள் மோசமாக உள்ளது என தெரிவித்தவர் கோவை மேயர் ராஜினாமா செய்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.வெள்ளளூரில் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க 76 லட்சம் செலவு செய்துள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இவர்களுக்கு டீ எங்கே சைனாவில் இருந்து வந்ததா? என கேள்வி எழுப்பிய அவர் இதில் தவறு செய்து இருந்தால் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அத்திகடவு அவினாசி திட்டம் எப்போது வரும்? அதில் என்ன பிரச்சினை இருக்கின்றது என கேள்வி எழுப்பியவர் நல்லாறு,பாம்மாறு திட்டம்,புன்னம்புழா திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் கஞ்சா கிடைப்பதாகவும் டிரைவ் நடத்தப்பட்டாலும் குற்றவாளிகள் எளிதல் வெளியில் வந்து விடுகின்றனர்.காவல் துறைக்கு தெரியாமல் எதுவும் நடந்து விடாது எனக்கூறிய அவர் சந்துகடையில் சரக்கு விற்பவர்களும் கள்ளசாராயம் விற்கின்றனர் என்று தான் சொல்ல முடியும் எனவும் இதை திமுக்காரன் விற்கின்றான் பார் நடத்துவதும் திமுககாரன்தான் என தெரிவித்தார். தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தெரிவித்த அவர் 69 சதவீத இட ஒதுக்கீடு ரத்தாகும் வாய்ப்பு இருப்பதாகவும் நீதிமன்றம் எப்போது வேண்டுமானலும் இந்த வழக்கை எடுக்கும் என்றவர் அட்டவணையில் பாதுகாப்பு இருக்கின்றது என்றாலும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தமிழக அரசு பொய் பேசி கொண்டு இருக்கின்றனர் என தெரிவித்தார்.பிற மாநிலங்களில் சாதி வாரி கணக்கெடுப்பு நடக்கும் போது தமிழக முதல்வர் தனக்கு அதிகாரம் இல்லை என்கின்றார் எனவும் அரசியல் காரணங்களுக்காக இதை நடத்த அவர் தயங்குகின்றார் எனவும் தெரிவித்தார். சமூகநீதி மேல் இந்த அரசுக்கு அக்கறை இருந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் அதிகாரம் இல்லை என்பது கோழைத்தனம் எனவும் பிற மாநில முதல்வர்கள் நடத்தும் போது உங்களுக்கு என்ன பயம் எனவும் கேள்வி எழுப்பியவர் 69 விழுக்காடுக்கு ஆபத்து இருப்பதாகவும் அப்படி ஆபத்து ஏற்பட்டால் திமுக அரசு அன்றே கவிழும் எனவும் தெரிவித்தார்.48 லட்சம் கோடி மத்திய பட்ஜெட்டில் தமிழகம் வராதா என்ன? எனவும் கடந்த ஆண்டை விட கூடுதல் நிதி தமிழகத்திற்கு ஒதுக்கீடு கொடுத்து உள்ளதாகவும் 6500 கோடி ரூபாய் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மட்டும் கொடுத்து இருப்பதாகவும் தமிழகத்தின் பெயர்சொல்லவில்லை என்பது பிரச்சினையா? எனவும் கேள்வி எழுப்பினார். பட்ஜெட்டில் பிகார்,ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்திருக்கும் நிலையில் தமிழகத்துக்கு குறைவாக கொடுக்கப்பட்டிருப்பது குறித்தும் தமிழக உரிமைகளுக்கு எப்பொழுதும் குரல் கொடுக்கும் பாமக இந்த விவகாரத்தில் அமைதியாக இருக்கிறதா எனவும் அடுத்தடுத்து கேள்வி அன்புமணி ராமதாஸிடம் கேட்கபட்டது.தொடர்ச்சியாக பட்ஜெட் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதால் ஆவேசமடைந்த அவர் இரு கைகளை கும்பிட்டு "அப்பா சாமி ஆளை விட்டுடுங்க" என தெரிவித்தார்.கோவை செய்தியாளர்கள் எப்பவும் ஆக்கபூர்வமாக கேள்வி கேட்பார்கள் ஏன் இப்போது கேரளா மாதிரி கேள்வி கேட்கிறீர்கள் உங்களுக்கு என்னாச்சு எனவும் கேள்வி எழுப்பினார்.மத்திய சுற்றுலா துறை அமைச்சர் கிஷன்ரெட்டி இன்று மாலை கோவை வருகிறார் அவரிடம் பட்ஜெட் தொடர்பான இந்த கேள்விகளை கேளுங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் எண்ணிகை அதிகரித்து வருவதாகவும் அரசு பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது அரசின் தோல்வி எனவும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
Next Story