முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தை தவிரத்தற்கு அரசியல் மட்டுமே காரணம்- ஜி.கே வாசன்!
Coimbatore (south) King 24x7 |27 July 2024 2:23 PM GMT
நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லாததை மறைக்கவே திமுகவினர் ஆர்ப்பாட்டம் என குற்றச்சாட்டு.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கோவை மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.இதில் அக்கட்சியின் தலைவர் G.K.வாசன் பங்கேற்றார்.கூட்டத்திற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன் த.மா.கா 2026 தேர்தல் வியூகத்தின் அடிப்படை மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது எனவும் கோவை மண்டலத்தின் மறுசீரமைக்கப்பட்ட கூட்டம் இன்று நடைபெறுகின்றது என தெரிவித்தார்.நாளை மதுரை,திருச்சி மண்டல கூட்டங்கள் நடைபெறுவதாக தெரிவித்தவர் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயார் நிலையில் செயல்படவும் உறுதியான நிலையை ஏற்படுத்த இந்த கூட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.2024 டிசம்பர் 31 க்குள் முதல்கட்ட தேர்தல் பணிகள் ஐனவரி 1ல் இருந்து இரண்டாம் நிலை பணிகள் அதன் பின்பு தேர்தல் ஆயத்த பணிகள் மேற்கொள்ளபடும் எனவும் த.மா.கா வை எல்லா மாவட்டங்களிலும் பலப்படுத்த 120 பேர் மாவட்ட தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார். த.மா.கா வினர் தங்கள் சொந்த பொருளாதார நிலையில் இருந்து கட்சியை நடத்துகின்றனர் எனவும் துணை அமைப்புகளை வலுபெற செய்யும் நடவடிக்கைகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி பயணிப்பதாகவும் தெரிவித்தார். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் இந்த முறை பெரும்பாலான வாக்காளர்கள் திமுக கூட்டணிக்கு வாக்களித்து இருப்பதன் நோக்கம் என்ன? என கேள்வி எழுப்பியவர் குறைகளை நிறைவாக்குவார் என்ற எண்ணத்தில் மக்கள் வாக்களித்தனர்.ஆனால் மக்களின் எண்ணங்களை நிறைவேற்ற முதல்வர் ஸ்டாலின் தவறி இருப்பதாகவும் தெரிவித்தார்.மதுரை எய்ம்ஸ்,மெட்ரோ ரயில் திட்டங்களை பற்றி பேசும் முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க வில்லை எனவும் மத்திய அரசு அதிக பணம் கொடுக்க வேண்டும் என நாங்களும் எதிர்பார்க்கின்றோம் எனக் கூறினார்.நிதி ஆயோக்கில் அமர்ந்து முதல்வர் தேவைகளை நேரடியாக கேட்டு இருக்க வேண்டும் எனவும் முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் தவிரத்தற்கு காரணம் அரசியல் மட்டுமே என தெரிவித்தார்.நிதி ஆயோக் கூட்டம் முதல்வர் நேரில் சென்று அழுத்தமாக ஆலோசனை சொல்ல கூடிய இடம் அதை அவர் செய்ய தவறி இருப்பதாக குற்றம்சாட்டினார்.மக்கள் பிரச்சினையில் அரசியலை புகுத்த கூடாது எனவும் எல்லா மாநிலங்களுக்கும் மாற்றந்தாய் மனப்பான்மை இல்லாமல் மத்திய அரசு நிதி வழங்கி இருக்கின்றது எனவும் எந்தெந்த திட்டங்களுக்கு நிதி தேவையோ அதை மத்திய அரசு கொடுத்து இருக்கின்றது என்றவர் தமிழகத்திற்கு நிதி வேண்டும் என்பது தமாகாவின் வேண்டுகோளும் கூட எனவும் தமிழகம் மட்டுமல்ல பா.ஜ.க வெற்றி பெற்ற மாநிலங்களின் பெயர்கள் கூட பட்ஜெட்டில் சொல்லப்பட வில்லை எனவும் இன்று திமுக ஆர்ப்பாட்டம் செய்ய காரணம் முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லாததது தவறு என்பதைக் மறைக்கவே நடத்தப்படுகின்றது என்றார். த.மா.கா இளைஞரணி யுவராஜ் ராஜினாமா செய்தது குறித்த கேள்விக்கு கட்சியில் மறு சீரமைக்கப்பட்டுளளது எல்லா நிர்வாகிகளிடம் பதவியை ராஜினாமா செய்து கொடுத்து மறுசீரமைப்பிற்கு உறுதுணையாக உள்ளனர் எனவும் குறையை மட்டும் பத்திரிகையாளர்கள் வேமாக கண்டு பிடிக்கின்றீர்கள் எனவும் குடும்ப ரீதியாக கட்டுப்பாடாக கூட்டு குடும்பமாக இருக்கும் கட்சி த.மா.கா என தெரிவித்தார்.பதவிகள் மாற்றம் என்பதை விட கூட்டு குடும்பம் போல பதவிகளை மற்றவருக்கு பரிமாறி கொடுத்துள்ளோம் என தெரிவித்தவர் ராஜினாமா செய்த நிர்வாகிகளும் எங்களுடன் தான் இருக்கிறார்கள் எனவும் இளைஞரணி தலைவர் யுவராஜ் பதவி விலகியது குறித்த கேள்விக்கு ஜி.கே.வாசன் பதில் அளித்தார். தாமக கட்சிக்கு பொருளாதார நெருக்கடி இருக்கிறது என்ற அவர் அதையும் மீறி நேர்மையான நிர்வாகிகளுடன் கட்சியை நடத்துகிறோம் என தெரிவித்தார்.தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் சிறப்பாக செயல்படுவதாக கூறியவர் மின்கட்டண உயர்வால் தொழில்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் மின்கட்டண உயர்வை அரசு ரத்து செய்ய வேண்டும் என்றார்.கீழ்பவானியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் கோவை- பாலக்காடு சாலையில் எல் & டி சாலையினை ஆறு வழிசாலையாக மாற்ற வேண்டும், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு காமராஜர் பெயர் வைக்க வேண்டும்,Sihs காலனி மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்,சேலம் பெரியார் பல்கலை கழக நிர்வாகம் பற்றி சரியாக உண்மை நிலையை வெளிப்படுத்தி மாணவர்களிக்கு பாதிப்பு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டியது அரசின் கடமை எனவும் தெரிவித்தார்.
Next Story