மாசில்லா சுற்றுச்சூழலை உருவாக்க அதிக மரங்கள் நட வேண்டும்-வானதி சீனிவாசன்!
Coimbatore (south) King 24x7 |29 July 2024 11:06 AM GMT
செல்போன்களை அனைத்து உறுதிமொழி எடுத்துக் கொண்ட மாணவிகள்.
கோவையில் மேட்டுப்பாளையம் சாலை பகுதியில் உள்ள அவிநாசிலிங்கம் மகளிர் மனையியல் கல்லூரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் கல்லூரியின் துணை வேந்தர் முனைவர்.பாரதி ஹரிஷங்கர்,பேராசிரியர்கள் மற்றும் 2000க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். சுற்றுச்சூழலை பாதுகாக்க செல்போன் பயன்பாட்டின் மூலம் வெளியேறும் மாசுபாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது செல்போன்களை அணைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய வானதி சீனிவாசன் சுற்றுச்சூழல் மாசுபாடை குறைக்கும் வகையில் சூரிய சக்தி மின் உற்பத்திக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் உலக நாடுகளோடு ஒப்பந்தம் செய்து பிரதமர் மோதி தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருவதாகவும் மாசில்லா சுற்றுச்சூழலை உருவாக்க அதிக அளவு மரங்களை நட வேண்டும் என்ற அவர் அதற்கான நிதியாக தனது சட்டமன்ற தொகுதி வளர்ச்சி நிதியை பயன்படுத்த தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து மாணவிகள் அனைவரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான உறுதி மொழியை எடுத்துக்கொண்டனர்.இந்நிகழ்வினை அவினாசிலிங்கம் மகளிர் மனையியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள்,மக்கள் சேவை மையம் மற்றும் தேன் சிட்டு ஆகிய தன்னார்வ அமைப்புகள் ஒருங்கிணைத்திருந்தனர்
Next Story